இந்த கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.அந்த 33 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு உலக கோப்பை அணியில் இடம் தராத நிலையில் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதால் கடும் அதிர்ச்சில் இருந்துள்ளார் இதனை வெளிப்படையாக அவர் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து போட்டியின் போது காயம் காரணமாக ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் விலகிய போதும் மாற்று வீரர் பட்டியலில் இருந்து அம்பத்தி ராயுடு விற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரிஷப் பண்ட் மற்றும் அகர்வால் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியின் உச்சத்திற்கு சென்று அம்பத்தி ராயுடு-வுக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடும் படி அழைப்பு விடுத்திருந்தது.
மேலும் அவருக்கு அந்த நாட்டின் நிரந்தர குடியுரிமை வழங்கயும் தெரிவித்திருந்தது இந்த நிலை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் உலக கோப்பையில் இடம்பெறாத நிலையில் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாகவும் அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார். 33 வயதான ராயுடு இதுவரை 55 ஒருநாள் போட்டியிலும் ஆறு T20 போட்டியிலும் விளையாடி உள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments