தூய்மை இந்தியா இயக்கம், தேசிய பராம்பரிய நகர மேம்பாட்டு திட்டம், சீர்மிகு நகர திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இத்துறையின் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது. தூய்மை இந்தியா இயக்கம் மூலம் திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாடு ஒழிக்கப்பட்டு வருகிறது. 2018 ஏப்ரல் முதல் 1612 நகரங்கள் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாடு முழுவதிலும் இந்த நகரங்களில் எண்ணிக்கை 4124 ஆக உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் 62 லட்சம் தனிநபர் கழிப்பறை களும் 5 லட்சம் சமுதாய மற்றும் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடம் பயன்பாடு இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் 68 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2020 - க்குள் 1 கோடி வீடுகளுக்கு அனுமதி வழங்கவும் 2020 ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் ரூ.1 லட்சத்து 275 கோடி, மத்திய உதவிக்கு அனுமதி அளிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ரூபாய் 33 ஆயிரத்து 455 கோடி நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டெல்லி சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் 536 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் ஓடுகிறது. இதில் 2018ல் மட்டும் 110 கிலோமீட்டர் பயன்பாட்டுக்கு வந்தது. 2018ல் டெல்லி மெட்ரோ விரிவாக்கம் மற்றும் போபால் இந்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்
0 Comments